வீரமும், தியாகமும் நிறைந்ததுதான் பாரதத்தின் வரலாறு அத்தகைய வரலாற்றை நாம் நம் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்போம்.
சுதந்திர இந்திய காலத்தில் நடந்த ஒரு சம்பவம்:
”வந்தேமாதரம்” என்று முழுங்குவதா குற்றம்? “வந்தேமாதரம், என்பதன் பொருள்தான் என்ன?” எமது தாய்நாட்டை வாழ்த்துகிறோம், தலையார வணங்குகிறோம்’ என்பது அன்றோ?” தாய்நாடு வாழ்க’ என்று முழுங்குவது குற்றமானால் அந்தக் குற்றத்தை எங்கள் இறுதிமூச்சு இருக்கும்வரை செய்து கொண்டேயிருப்போம். தாயகத்தை வாழ்த்துவது ஈனச் செயலன்று என கலெக்டர் விஞ்சுவுக்கு தக்க பதிலடி கொடுத்தார் வ.உ.சி. செக்கிழுக்க நேர்ந்தது பற்றி வீரச் சிதம்பரனார் விம்மி அழவில்லை. பின் எப்படித்தான் அந்த துன்பத்தைச் சகித்திருப்பார்? எண்ணெயாடும் செக்கை சுற்றுவதா அவர் எண்ணிட வில்லை. மாறாக சுதந்திர அன்னையின் திருக்கோயிலை வலம் வருவதாக கற்பனை செய்து கொண்டார். கற்பனா சக்தி படைத்த கவிஞரல்லவா அவர்?
என் மனமும் என்னுடலும் என் சுகமும் என் அறமும் என் மனையும் என் மகவும் என் பொருளும் என்னறிவும் குன்றிடினும் யான் குன்றேன் கூற்றுவனே வந்தாலும் வென்றிடுவேன் காலால் மிதித்து. துன்பங்கள் அடுத்தடுத்துத் தொடர்ந்து வந்த போதிலும் அவர் கலக்க மடையவில்லை என்பதையே அவரது இக்கவிதை காட்டுகிறது.
தமது இறுதிக்காலத்தில் அவர் காண விரும்பியது சுதந்திரம்; கேட்க விரும்பியதெல்லாம் பாரதியாரின் பாடல்கள்; வணங்க விரும்பியது தேசபக்தர்களின் கூட்டத்தை!.

Comments
Post a Comment